சினேக பூர்வ கிரிக்கெட் போட்டியில் லண்டன் கல்முனை அணி வென்றது.

(எஸ்.அஷ்ரப்கான்)
லண்டன் மாநகரத்தில் இடம்பெற்ற லண்டன் நிந்தவூர் அணிக்கும் லண்டன் கல்முனை அணிக்கும் இடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாம் போட்டியில்  லண்டன் கல்முனை அணியினர் 12 ஓட்ட வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கல்முனை லண்டன் அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 82 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் லண்டன் அணியினர் 8 ஓவர்களில்  70 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.