அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் கல்விநடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை (08) முதல் வழக்கம் போல் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக  ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை  சகல வகுப்புக்களுக்கும் ஆரம்பிக்கப்படும் எனகல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது.

 

ஆனால் ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று திங்கட்கிழமைபாடசாலைக்கு சமுகம் கொடுக்கவேண்டுமென கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பள்ளி குழந்தைகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தோன்றும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீரா  தெரிவித்தார்..