ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழா

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் 66 வது திருவிழா அன்னையின் திருசுருவ ஆசீருடன் நிறைவுபெற்றது .

கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருத்தல திருவிழா கூட்டுத் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்குதந்தை என்டனி டிலிமா இ அருட்தந்தை ஜூலியன் இ அருட்தந்தை எலக்ஸ் ரொபட் இ அருட்தந்தை அம்ரோஸ் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர் .

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை என்டனி டிலிமா தலைமையில் கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருத்தல திருவிழா நவ நாட்காலங்களில் மறைவுரைகளும்இ திருப்பலிகளும் இடம்பெற்றது

அன்னையின் திருத்தல திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் நேற்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து திருத்தலம் நோக்கிய பாத பாதயாத்திரை இடம்பெற்றதுடன் மாலை விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் திருப்பலியின் பின் அன்னையின் திருச்சுருவ பவனியும் தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ ஆசீருடன் திருவிழா நிறைவுபெற்றது .

இன்று இடம்பெற்ற ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருவிழா திருப்பலியில் மாவட்ட அரசாங்க அதிபர் இ மாநகர முதல்வர் இ நாடாளுமனர் உறுப்பினர் இபொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் இ அருட்தந்தையர்கள் இ அருட் சகோதரிகள் இ மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்த மக்கள் என பலர் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .