இன்று செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி பெருவிழா!

காரைதீவு நிருபர் சகா


செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி தீர்த்த உற்சவ பெருவிழா இன்று(7) திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இன்று  திங்கட்கிழமை 07092020 காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி விநாயகர் வழிபாடு இடம்பெற்று வாஸ்து சாந்தி கிரியைகளுடன் மதிய பூசை இடம்பெறும்.

இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இராஜாபுரம் குளக்கரையிலிருந்து அம்பாள் பொற்கரம் பாலித்தருளும் நிகழ்வினைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீ மஹா விஸ்ணு அலங்கார பூசைகளுடன் சுவாமி உள்வீதி வலம் வருதலும் இடம்பெறும்.நாளை  08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இராஜபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குட பவனி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு ஸ்ரீ மஹா விஸ்ணு மதிய அலங்கார பூசை இடம்பெறும்.

09 ஆம் தகதி புதன்கிழமை 11 மணிக்கு ஸ்ரீ மஹா விஸ்ணு மதிய அலங்கார பூசையும் அன்றிரவு இரத பவனி ஆலயத்தில் ஆரம்பமாகி மாவளையாறு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இராஜபுரம் விபுலானந்தர் வீதி பிரதான வீதி பாய்தரி வீதியூடாக அம்மன் பிள்ளையார் திரிசூல காளியம்மன் ஆலயங்கள் தரிசனத்துடன் பிரதான வீதியூடாக கித்துள் முருகன் ஆலயம் சென்று கித்துள் சந்தி வழியாக கித்துள் சித்திவிநாயகர் ஆலயம் சென்று மறு நாள் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை வடிச்சல் ஆற்றங்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெற்று தொடர்ந்து மஹேஸ்வர பூசை இடம்பெறும்.

11 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அம்மன் ஆலயத்தில் மதிய நேர அம்மன் விசேட மாவிளக்குப் பூசைகள் இடம்பெற்று கரகம் குடிவிடல் என்பன இடம்பெறும். ஆலய உற்சவகால பிரதம குருவாக கரடியனாறு குசணானமலை குமரன் ஆலய பிரதம குருக்களான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்கள் பணியாற்றுவதுடன் ஆலய உதவிக் குருவாக அலங்கார பூசனம் சிவஸ்ரீ தருமரத்தினம் சந்திரகுமார் சர்மா (முத்துமாரியம்மன் ஆலயம் நாவல்தோட்டம்) .

 
உற்சவ காலத்தில் தினமும் மதிய இரவு நேரங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறும். கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றி அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும்.