சங்கமன்கண்டிக்கு அண்மையில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரின்றது.

அம்பாறை மாவட்டம் உள்ள சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பிடித்துள்ளது.. MT NEW DIAMOND  என்ற கப்பலில் தீப்பிடித்துள்ளதாகவும்பணியாளர்களை மீட்க கடற்படை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த கப்பலில் 23 பேர் உள்ளனர் என  கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

இந்த கப்பல் பனாமாவைச் சேர்ந்தது என்றும் இந்தியா செல்லும் வழியில்தான் இச்சம்பவம் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது..

திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து இரண்டு கப்பல்களும், ஹம்பாந்தோட்டா கடற்படைத் தளத்திலிருந்து ஒரு கப்பலும் கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக நிறுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கப்பல் மற்றும் தொடர்புடைய கடல்களை கண்காணிக்க இலங்கை விமானப்படை விமானம் அனுப்பப்பட்டுள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை கப்பலின் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் சுமார் 3 மில்லியன் டன் எரிபொருள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது முகாமையாளர் டாக்டர் டர்னி பிரதீப் குமாரா தெரிவித்தார்.