ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்

வி.சுகிர்தகுமார் 

  அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ்  நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி;.பபாகரன் தலைமையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றன.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா உள்ளிட்;ட பிரதேச செயலகத்தின் பிரிவுத்தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நியமன நிகழ்வின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.