பாடசாலை அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி பெற்றோர், பொது அமைப்புக்கள், மாணவர்கள் இரு மணி நேரம் போராட்டம்.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

பள்ளிமுனை மன்.புனித லூசியா பாடசாலை அதிபரை இடம்மாற்ற வேண்டாம் என பள்ளிமுனை பாடசாலை பெற்றோர், பொது அமைப்பினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் புதன் கிழமை (02.09.2020)  பாடசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வருடாந்த இடம்மாற்றத்தின்போது இவ் பாடசாலை அதிபருக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டபோது இவர் இது சம்பந்தமாக கல்வி வலய இடமாற்ற சபைக்கு முறையீடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதை பரீசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில் இவரை தற்காலிகமாக மன்னார் கோட்ட கல்வி வலயத்தில் இவ் வருடம் மட்டும் கடமைபுரியும்படியும் இவ் பாடசாலை புதிய அதிபருக்கு பொறுப்பை வழங்கும்படியும் திங்கள் கிழமை (31.08.2020) இவருக்கு இடமாற்றக் கடிதம் அனுப்பப்ட்டிருந்தது.

இவற்றை இடை நிறுத்தி இவ் அதிபர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓரிரு வருடங்களே இருப்பதாலும் இவரால் பாடசாலை தற்பொழுது துரித அபிவிருத்தி அடைந்து வருவதுடன் அவரின் மனைவி சுகயீனமுற்ற நிலையில் இருப்பதாலும் இவ் அதிபரை உடன் இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரியே போராட்டத்தில் இறங்கியவர்கள் தெரிவித்தனர்.

இது விடயமாக மன்னார் கல்வி வலய பணிப்பாளர் பிறட்லி தெரிவிக்கையில் இவருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் இவர் இது விடயமாக அப்பீல் செய்ததாகவும் இதற்கமைய அவருக்கு தற்காலிகமாக மன்னார் கோட்ட கல்வி அலுவலகத்தில் கடமைபுரியும்படி கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்கவே இவ் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருந்தபோதும் தற்பொழுது இவரை இடமாற்ற வேண்டாம் என இங்குள்ள பெற்றோர் பொது அமைப்புக்கள் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தமையால் இது விடயமாக கல்வி அமைச்சுக்கு தெரிவிக்க்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து தகுந்த பதில் கிடைக்கும் வரைக்கும் இவ் இடமாற்றத்தை இடைந நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதை; தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இவ் அமைதியான ஆர்பாட்டத்தின் இடத்துக்கு வருகைதந்த கல்விப் பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து இவ் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடருவதற்கு தங்கள் வகுப்பறைக்குள் சென்றனர்.
(வாஸ் கூஞ்ஞ)

mannar