மட்டு— தாழங்குடாவில் விபத்து–இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி—சாரதி தப்பியோட்டம் படம் வீடியோ

0
104
ரீ.எல்.ஜவ்பர்கான்– கதிரவன், முர்சித்)
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் தாளங்குடாவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு(1) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சொகுசு பஸ் வண்டியுடன் அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள்; மோதியதிலேயே இவ்விபத்து காத்தான்குடி  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளங்குடா சமுர்த்தி வங்கிக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் புதுக்குடியிருப்பு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 19வயதுடைய கி.நிலுக்சன் மற்றும்  ஒருபெண்குழந்தையின் தந்தையான க.சுலக்சன்    22  ஆகியோரே பலியாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் வண்டி மீது பொதுமக்கள்  தாக்குதல் நடாத்தியதில் பஸ் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.பஸ்ஸின் சாரதியும் நடாத்துனரும் தப்பியோடியுள்ளனர்.
பஸ்ஸின் அதிக வேகமே விபத்துகுக் காரணமெனத் தெரியவருகிறது.காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது