மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவிற்கு ஊடக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் விஜயம்

0
122
அரசாங்க தகவல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன் இன்று (31) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த தகவல்கள் மற்றும் செய்திகள், ஊடக அறிக்கைகள், அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் இப்பிரிவின் செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் குறைநிறைகள் தொடர்பாக மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தனிடம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் இப்பிவிரில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக தேவைகள் போன்றவற்றை விரைவாக நிவர்த்தி செய்து தருவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உறுதியளித்ததுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் நிருவாக நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பினைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மாவட்ட ஊடகப் பிரிவிற்கான விஜயம் அமைந்திருந்தது.
இம்மாவட்ட ஊடகப்பிரிவானது 1999 ஆண்டு ஜனவரி மாதம்முடுதல் மாவட்ட செயலகங்களில் செயற்படத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.