சின்னக்கதிர்காமம் மண்டுர் மஹோற்சவம்:நாளை தீர்த்தம்.

0
118
காரைதீவு  நிருபர் சகா

‘சின்னக்கதிர்காமம்’ என அழைக்கப்படும் வரலாற்றுப்பிரசித்திபெற்ற          மண்டுர் முருகன் ஆலயத்தின்வருடாந்த மஹோற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது.

 
நாளை 2ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறவிருக்கிறது. இறுதிக்கட்ட திருவிழாக்கள் தற்போது நடந்தேறிவருகின்றன.

அங்கு செல்வோர் அனைவரையும் நுழைவாயலில் வெப்பநிலை பரிசோதிப்பதுடன்  மாஸ்க் அணிந்து வருவதையும் சோதனை செய்யப்படுகிறது. பூஜை நேரத்தில் 50பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

 
 எனினும் மக்கள் சாரிசாரியாக சென்று வழிபட்டுவருகின்றனர்.பாதயாத்திரையாக ஆயிரககணக்கான பக்தர்கள் சென்று வந்துண்ளள்ளனர். காரைதீவிலிருந்து வழமைபோல பாதயாத்திரிகர்கள் இம்முறை சென்றுவந்தனர்.

ஆலயத்தில் திரைமூடி பூஜைகள் இடம்பெறுவது வழக்கம். பக்தர்களுக்கு மந்திரித்த நூல் கட்டப்படுகிறது. முன்னாலுள்ள பாரிய வெளியில் பக்தர்கள் அநாயாசமாக இருந்து திருவிழாக்களை கண்டுகளித்துவருகின்றனர்.தினமும் பகல் இரவுத்திருவிழாக்கள்   இடம்பெற்றுவருகின்றன.