அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை திருத்துவதில் அமைச்சரவை கவனம் செலுத்தவில்லை. நீதியமைச்சர்

0
56

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை நிறுவுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் இன்னும் நடத்தவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின்   தலைவர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை திருத்துவதில்  அமைச்சரவை கவனம் செலுத்தவில்லை.

புதிய அரசியலமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளின் போது மாற்றங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டிலிருந்து விடுபடுவது மற்றும் வருங்கால சந்ததியினரை துஷ்பிரயோகம் மற்றும் வயதுக்குட்பட்ட திருமணங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து  கலந்துரையாடியதாகவும் தெரிவித்த நீதியமைச்சர்

மதகுருக்களுக்கு எதிரான வழக்குகளை உடனடியாக தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.