தொழில் வழிகாட்டல் கல்வியை கட்டாயமாக்க அரசு முடிவு.

6 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு பள்ளிகளில் தொழில் வழிகாட்டுதலை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்த முன்முயற்சியின் மூலம் மாணவர்கள் வேலை சார்ந்த பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்,

கூடுதலாக, குழந்தைகளிடையே பல்வேறு உளவியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாடசாலைகளில் ஆலோசனையும் கட்டாயமாக்கப்படும்.

ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயக் கல்வி காலம் முடிந்துவிட்டது என்று சான்றிதழ் வழங்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.