பாரிய அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர்.

0
97

பாரிய அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசியலமைப்பால் வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நாம் அனைவரும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் அபிலாஷைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்காக  நாடாளுமன்ற குழு அறை எண் 01 இல் நடைபெற்ற  பயிற்சிப்பட்டறையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

1977 முதல் இப்போது வரை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டை ஆண்ட ஒரு அரசியலமைப்பு உள்ளது. இது அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். இந்த அரசியலமைப்பை மாற்றுவது எங்கள் பொறுப்பு. அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொரு கோமாவும், ஒவ்வொரு நிறுத்த புள்ளியும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்றார்.