மட்டக்களப்பு – கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொண்ட விவசாச் செய்கையின் அறுவடை நீகழ்வு

(எஸ். சதீஸ்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டத்தின் அறுவடை நீகழ்வு  செவ்வாய் கிழமை வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம் பெற்றது

நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யும் நோக்குடனும்,  வங்கியின் சூழலை பசுமையாக வைத்திருப்பதற்கும் கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளரின் திட்டமிடலில் இத் தோட்டம் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
இவ் அறுவடை நீகழ்வில் வங்கி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்