மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.

(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்   மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை, மகிழவட்டவான், நரிப்புல் தோட்டம்

போன்ற கிராமத்தில் உள்ள பொதுக் கட்டிட வளாகங்கள், ஆலயங்கள்   போன்றவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்  செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேதச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிரமதானப் பணியில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இணைந்ததாக மேற்படி சிரமதானம் வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இங்குள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இதன்போது இங்கு காணப்பட்ட புற்கள், போத்தல்கள், தகரப் பேணிகள், பிளாஸ்டிக் பொருட்கள்,  மற்றும் குப்பைகளை அகற்றி  சுத்தம் செய்யப்பட்டது.