வைத்தியசாலையில்கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொற்றுநோய் பாதுகாப்பு அங்கிகள்.

0
124

பைஷல் இஸ்மாயில் –

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் 21 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்றுநோய் பாதுகாப்பு அங்கி (Protective Coverall) இன்று (25) கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீலினால் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணனின் அறிவுருத்தல்களுக்கும், ஆலோசனைக்கும் அமைவாகவே இந்த தொற்றுநோய் பாதுகாப்பு அங்கிகளை (Protective Coverall) கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீல் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை, வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் மற்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.