30வருட கல்விச்சேவையிலிருந்து மெய்யழகன் மகேஸ்வரி ஓய்வு

0
145
காரைதீவு  நிருபர் சகா


முப்பது வருட கல்விச்சேவையிலிருந்து கல்முனை பற்றிமா தேசியக்கல்லூரியின் தமிழ்ப்பட்டதாரி ஆசிரியை திருமதி மெய்யழகன் மகேஸ்வரி நேற்று தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.
சம்மாந்துறையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர்  ஆரம்பஇடைநிலைக்கல்வியை கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயத்திலும் சம்மாந்துறை தேசியகல்லூரியிலும் பயின்றார்.

ஆசிரியநியமனத்தைப்பெற்று  மல்வத்தை விபுலாநந்த மகாவித்தியாலயத்தில் கற்பித்தஅவர் பின்னர் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியில் கற்பித்தார்.
பாடசாலை முகாமைத்துவசபை உறுப்பினரான இரட்டைக்கலைப்பட்டதாரியான திருமதி மெய்யழகன் மகேஸ்வரி அகிலஇலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகளில் மாணவர்களை தயார்படுத்தி பல வெற்றிகளுக்கு காரணகார்த்தாவாகஇருந்துள்ளார்.

முகாமைத்துவஉதவியாளர் மெய்யழகனை மணந்து இருபிள்ளைகளின் தாயாவார். இவரை பாடசாலைச்சமுகம் பற்றிமா அதிபர் வண.சகோ.சந்தியாகு தலைமையில் நேற்று பாராட்டிக்கௌரவித்தது.