விக்கி, கஜேந்திரகுமார் இன்னும் நாட்டை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலில். எச்சரிக்கின்றார் சரத்வீரசேகர

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பதவியேற்பதற்கு முன்னர் முள்ளிவாயக்காலில்  சத்தியப்பிரமானம் செய்தமை அதிகாரபூர்வமற்றவிடயம் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற சத்தியம் செய்வதன் மூலம், அவர்கள் இன்னும் நாட்டை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என இராஜங்க அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

கடந்த 23ம்திகதி பிலியந்தல மாவட்டவைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மிக மோசமான சண்டை நடந்தது, அங்கு ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாராளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தொடரில் புதிய சபாநாயகருக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்தியபோது திரு. விக்னேஸ்வரன் ஒரு இனவெறி அறிக்கையை வெளியிட்டார்

எதிர்காலத்தில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவதாக நம்புவதாகவும், விக்னேஸ்வரனின் அறிக்கையை ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகவும்  வீரசேகர  தெரிவித்தார்