மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தின் நரிப்புல்தோட்டம் கிராமத்தில்

0
187

சப்ரிகம வேலையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

( எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நரிப்புல்தோட்டம் கிராமத்தில் கொங்கிறீட் வீதிக்கான ஆரம்பகட்ட வேலையினை  தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரள் திங்கட்கிழமை (24ம் திகதி)  (திங்கட்கிழமை) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

சப்ரிகம கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்  இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  இவ்வீதி அமைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ச.வியாேழந்திரன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,கிராம உத்தியொகத்தர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலேக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

இப்பொழுது எதிர்கட்சியில் இருக்கும் சிலர் மீண்டும் மக்கள் மத்தியிலே வெவ்வேறு விதமான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள், இவர்கள் அரசாங்கத்தைப்பற்றி தமிழ் பகுதிகளில் ஒன்றையும் சிங்களப்பகுதியில் வேறேன்றையும் கூறிவருகின்றனர்.

எதிர்வரும் ஐந்து வருடத்திலே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு   மண் வீதிகளும் கிரவல் வீதிகளும் கொங்கிரீட் வீதிகளாகவும், தார் வீதிகளாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, இத் திட்டம் எதிர்வரும் 26ம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.