மட்டு. தான்தோன்றீஸ்வரரின் தேரோட்டம் இவ்வருடம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது,

அந்தவகையில் ஏனைய மாவட்டங்களில் தேரோட்டங்கள் நடைபெற்றுள்ளது ஆகையால் இந்த நிலை வேதனைக்குரியது – ஆலய நிருவாகம்
(எஸ்.சதீஸ்)
இலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்  தேரோட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்  ஆலய நிருவாகசபையினால் ஊடக சந்திப்பு  கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில்  சனிக்கிழமை 22ம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத் தீர்மானத்தின்படி, தான்தோன்றீஸ்வரரின் தேரோட்டம் இவ்வருடம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது,  அந்தவகையில் ஏனைய மாவட்டங்களில் தேரோட்டங்கள் நடைபெற்றுள்ளது ஆகையால் இந்த நிலை வேதனைக்குரியது, ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும்  தான்தோன்றீஸ்வரரின் தேரோட்டம் நடைபெறாது எனும் செய்தியால் மக்கள் குழப்பத்திலுள்ளனர்.
பிரதேச கூட்டத் தீர்மானப்படி அடியார்களை மட்டுப்படுத்தி, அவர்களை வீட்டில் இருந்து வழிபாட்டினை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளோம்.
என இதன்போது ஆலய நிருவாக செயலாளர் இளையதம்பி சாந்தலிங்கம் தெரிவித்தார்.