வரலாற்றில் முதற்தவையாக ஐக்கியதேசியகட்சி இல்லாத நாடாளுமன்றம்.இரு சிறைக்கைதிகளும் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்

0
257

ஜீவன் தொண்டமான் (25)  ஆர்.சம்பந்தன் 88

வேதாந்தி.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கொலை குற்றவாளி மற்றும் மற்றொருவர் உயர் கொலை வழக்கில்  சந்தேகத்தின்பெயரில் தடுப்புக்காவலில்  உள்ளவர்., அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய ஏதுவாக, பாராளுமன்ற அமர்வுகளின் முதல் நாளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இவர்கள்பொதுஜனபெரமுனகட்சியைச்சேர்ந்த பா.உ பிறேமலால் ஜயசேகர தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச்சேர்ந்த பா.உ சிவநேசதுரை சந்திரகாந்தன் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாதம்  இரத்தினபுரி உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி பிரேமலால் ஜெயசேகர,  இன்றைய தொடக்க அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மேல்முறையீட்டின் நகல் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அது சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், ஜெயசேகர ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை வென்றார், 104,237 வாக்குகளைப் பெற்று இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னுரிமை வாக்குகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது..

 பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் 54,198 வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்..

இவர்கள் இருவரும் சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அமர்வின் முடிவில் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் 223 பேர் மட்டுமே  இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள், ஏனெனில் தலா ஒரு தேசிய பட்டியல் இடத்தை வென்ற ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) மற்றும் நமது மக்கள் அதிகாரக் கட்சி (ஓபிபிபி) ஆகியவை  தேசியபட்டியலுக்கான பெயர்களை அனுப்பத் தவறிவிட்டதாகதேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது..

1947 இல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐக்கியதேசியகட்சிக்கு  பாராளுமன்றத்தில்  முதல்நாள் அமர்வில் ஒருபிரதிநிதி  கூட பங்கெடுக்காத பாராளுமன்றஅமர்வு இதுவாகும்

கடந்த நாடாளுமன்றத்தில், ஐக்கியதேசியகட்சி 106 இடங்களைக் கொண்டிருந்தது,  மிகப்பெரிய கட்சியாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நாடாளுமன்றத்தில் இலங்கையின் 09வது நாடாளுமன்றம் 11% இளைஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து (25) உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

இருபத்தியொரு (21) எம்.பி.க்கள் 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், இதில் 09 உறுப்பினர்கள் முதல் முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

67 எம்.பி.க்கள் 41-50 வயதுக்குள் காணப்படுகிறார்கள். 54 எம்.பி.க்கள் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

கட்சித்தலைவர்கள் சஜித் பிரேமதாச, அனுரா குமார திஸ்நாயக்க, படாலி சம்பிக ரணவக்க, பழணி திகம்பரம், மனோ கணேசன் ஆகியோர் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்குள் அடங்குகின்றனர்.

69 வயதான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முப்பத்தேழு (37) எம்.பி.க்கள் 61-70 வயதிற்குட்பட்டவர்கள்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் சாமல் ராஜபக்ஷ உட்பட ஒன்பது (09) எம்.பி.க்கள் 71-80 வயதுக்கிடைப்பட்டவர்கள்.

வசுதேவ நாணயக்கார, சி. வி. விக்னேஸ்வரன், ஆர்.சம்பந்தன் ஆகிய மூவரும் 81-90 வயதுக்கிடைப்பட்டவர்கள்.

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் மகன் ஜீவன் தொண்டமான் (25) நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயா மட்டுமே (88)அதிகூடிய வயதுடையவராகவும் திகழ்கின்றனர்.

அந்த வகையில், அதிகூடிய வயதுடையவர் இரா.சம்பந்தனின் என்ற சாதனையுடன் 09வது நாடாளுமன்றம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.