வாழைச்சேனை பேத்தாழை பிரதான வீதியில் கேக் வெட்டி பா.உ சந்திரகாந்தனின்பிறந்த நாள் கொண்டாட்டம்

0
129
????????????????????????????????????

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) 45வது பிறந்த நாள் வாழைச்சேனை பேத்தாழையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நா.திரவியம் தலைமையில் வாழைச்சேனை பேத்தாழை பிரதான வீதியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தயாரான திருமதி.கே.சிவநேசதுரை மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.