அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணி.கலையரசன்

(சகா,  மட்டுமாறன்)

சிதறுண்டு போய்க்கிடக்கும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஓரணியில் திரட்டி ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணியாகவிருக்கும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் நாவிதன்வெளிப்பிரதேசசபைத்தவிசாளர் தவராசா கலையரசன் தமது ஆதரவாளர்கள் மத்தியல் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

அவர்தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

பலவழிகளாலும் பின்தங்கியுள்ள எமது தமிழ்ப்பிரதேசங்களையும் மக்களையும் அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டுவேன். அவ்வண்ணம் செயற்பட்டு முன்னுதாரணமான மாவட்டமாக மிளிரச்செய்வேன்.

எமது கட்சி வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.எமது சகோதரர்கள் பிரிந்துநின்று செயற்பட்டுள்ளனர். அவர்களையும் ஒன்றிணைக்கவேண்டியதேவையுள்ளது.

மாற்றுக்கட்சிகளில் இயங்கிய எமது சகோதரர்களை எதிரியாக பார்க்கமாட்டேன். எல்லோரையும் அரவணைத்து பயணிப்பேன். உரிமையுடன்கூடிய அபிவிருத்தியை முன்கொண்டுசெல்ல அனைவரும் எனக்கு ஒத்துழைக்கவேண்டும்.

இதேவேளை மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  தேசிய பட்டியல் ஆசனம் தொடபான உத்தியோக பூர்வ அறிவிப்பில் கலந்து கொண்ட த.கலையரசன் கருத்து தெரிவிக்கையில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் கொடுக்க வேண்டும் என்ற அந்த உண்ணதமான உயிரிய செயற்பாட்டில் தேசிய பட்டியலை எனக்கு வழங்கியுள்ளனர். எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுக்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோன் என முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தவராசா கலையரசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  தேசிய பட்டியல் ஆசனம் தொடபான உத்தியோக பூர்வ அறிவிப்பில் கலந்து கொண்ட த.கலையரசன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தேர்தலில் நாங்கள் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் எந்த விதமான தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறவில்லை என்ற அந்த இழப்பை ஈடுசெய்யும் முகமாக எங்கள் தலைமைகள் அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் கொடுக்க வேண்டும் என்ற அந்த உண்ணதமான உயிரிய செயற்பாட்டில் எனக்கு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் 10 பேர் களமிறங்கியுள்ளோம் பல சவாலான சக்திகள் நிறைய இருந்தது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து களமிறங்கிய கருணா, மற்றும் பேரினவாத கட்சிகளில் சுயேச்சைக் குழுக்கள் என பலர் களமிறக்கப்பட்டு மக்கள் மத்தியிலே பொய்யான பரப்புரைகளை வழங்கியிருந்தனர்.

அந்த பரப்புரையை பிரதேசம் பிரதேசமாக வீடுவீடாக சென்று மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தோம். இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அளிக்கப்பட்ட வாக்குகளைவிட மாற்றுக் கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். இது மனவேதனையாக இருந்தாலும் எங்களை நம்பி எமது மக்கள் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை அளித்துள்ளனர்.

அந்தவகையில் இவ்வாறான நிலமையை கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனக்கு இந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிருக்கின்றனர். அந்தவகையில் மீளவும் மக்களை அனுகி பிரச்சனைகளை இனங்கண்டு முடிந்தளவு தீர்வுகளை வழங்கி எங்கள் கட்சியை ஒரு சீரான கட்டமைப்புக்குள் கொண்டு வரவேண்டிய கடைப்பாடு எனக்கும் என்னுடன் செயற்பட்ட கட்சி தொண்டர்களுக்கும் உண்டு.

எனவே நிச்சயமாக எமது தலைமைகளின் கட்டளைக்கு அமைவாகவும் மக்களின் தேவைகளை உணர்ந்து வேகமாக செயற்பட்டு  எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பையும் ஏற்படுத்தி அந்த  மக்களின் அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்து சகல பணிகளை முன்னெடுப்பேன் எனவும் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் கட்சி பெரும் ஆசனங்களை பெற செயற்படுவேன்

அவ்வாறு செயற்பட்டு  எங்களுடைய மக்களை சிறந்த ஒரு சமூகமாக வழியமைத்துக் கொடுக்க வேண்டிய பணி என்னிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது எனவே வாக்களித்த எமது மக்களுக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் விசேடமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை தேசிய பட்டியலை எமது மாவட்டத்துக்கு வழங்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்றார்.