தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 35 ஏக்கர் காணிகள்

(அப்துல்சலாம் யாசீம்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு  எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 35 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஸார ஜெயசிங்கவினால் இன்று (03) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் 1984 ஆம் ஆண்டு இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தனியார் சொந்தமாக்கப்பட்டு  ஆதரவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அதனை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்காக இளைஞர் விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்காக 35 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்காணியினூடாக  சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதுடன் சர்வதேச சர்வதேச இளைஞர் அபிவிருத்தி வலையம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும் இதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தூர நோக்காகக் கொண்டு ஏற்படுத்த உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தலைவருமான திஸ்ர ஏக இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய மாற்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திஸார ஜெயசிங்க மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் பசிது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசிர குமார மற்றும் வடக்கு மாகாணம் பணிப்பாளர் சந்திரபால, நிர்வாகத்துறை பணிப்பாளர் சமல் மனுல, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.