கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின விட தமிழர் விடுதலைக் கூட்டணிஅதிக ஆசனங்களை பெற்று கொள்ளும்.பொறியியலாளர் கு. சிவாகரன்

பாண்டிருப்பு 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால அசமந்த செயற்பாடுகள், தமிழ் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி மற்றும் கசப்பான உணர்வுகள் காரணமாக பெருமளவான தமிழ் மக்கள் மனதில், கூட்டமைப்புக்கு வாக்களிக்கக்கூடாது எனும் மனநிலை தோற்றம் பெற்றிருக்கின்றது தமிழ்த்தேசியக்கூட்டமைைைப்பை மக்கள் ஓரங்கட்டி மாற்று தலைமையை  தெரிவு செய்ய வேண்டும் என   கிழக்கு   தமிழர் ஒன்றியம்  சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும்  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்      பொறியியலாளர் கு. சிவாகரன் தெரிவித்தார்.

பெரியகல்லாறில் நேற்று(29) புதன்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 70 வருடங்களாக தமிழ் மக்கள் அனைவரும் எந்தவித மாற்றுக்கருத்துமின்றி தொடர்ச்சியாக கூட்டமைப்பிற்கே வாக்களித்து வந்திருந்தமை வெளிப்படை உண்மை. ஆனால் தற்பொழுது கூட்டமைப்பின் செயற்பாடுகளால், அதாவது 2010ம் ஆண்டின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகளில் நீண்ட இடைவெளியை காணக்கூடியதாய் இருந்தது. குறிப்பாக கடந்த மாகாணசபை ஆட்சியதிகாரம் தமிழரின் கரங்களிலிருந்து கை நழுவி போவதற்கு உடந்தையாக இருந்தமை, கடந்த நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது தங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அசமந்த போக்கில் பயணித்தமை, வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பெயரில் வெவ்வேறு மாறுபட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு உரித்தான விடயங்களை தங்களின் சுயநலனுக்காக இன்னும் ஒரு இனத்திற்கு விட்டுக்கொடுத்து வேடிக்கை பார்த்திருந்தமை, கடந்த நல்லாட்சியில் கிடைத்த சலுகைகளை தமிழ் மக்களின் நலன்பால் பயன்படுத்தாமல் தங்களின் நலனுக்காக பயன்படுத்தியமை. இது போன்ற காரணங்களினால் தும்புத்தடியை நிறுத்தினாலும், மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்ற கருத்து தற்போது பகற்கனவாகவே போயுள்ளது. தற்பொழுது தமிழ் மக்களின் மனநிலையில் கூட்டமைப்பிற்கு நிகரான, தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஆளுமைமிக்க சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசியல்    மாற்றணியை தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். இந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெருமளவான வாக்குச்சரிவு கூட்டமைப்பிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வருகின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின விட தமிழர் விடுதலைக் கூட்டணிஅதிக ஆசனங்களை பெற்று கொள்ளும் என்றார்