முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில்கைக்கலப்பு

0
180

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் பிறைந்துறைச்சேனை பகுதியில் இடம்பெற்ற கைக்கலப்பு காரணமாக ஒரு வேட்பாளரின் வாகனத்தில் இருந்த தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்களுடன், இரண்டு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகளும் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கிடையில் கைக்கலப்பு ஏற்பட்டமை காரணமாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸாரை கண்டதும் அவ்விடத்தில் இருந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளர்

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் ஆதரவாளர்களின் இரண்டு வாகனமும் மற்றும் வாகனத்தில் இருந்த அவரது தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.