வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல்

எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஊழியர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட ஐவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை பார்வையிட வந்த நபர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சுகாதார ஊழியர்கள், மின்தூக்கி இயக்குனர் ஒருவர் உட்பட மூவர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.