தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைத்து விட்டோம் என விடுதலைப்புலிகள் ஒருபோதும் கூறவில்லை. துளசி. ஓடியோ வீடியோ

0
229

(கதிரவன்)

இரா.சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் அல்ல அவர் தமிழர்களின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் தலைவர் என ஜனநாயகப் போராளி கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி  தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரச்சாரப் பணிகளை செய்வதாகவும் உறுதிமொழியெடுத்த இச்சந்திப்பில் துளசி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

விடுதலைப்புலிகள் அமைப்பினால்தான் தமிழ்தேசியகூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குழந்தைப்பிள்ளைகளுக்கும் தெரியும். சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைப்பெறுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள்தான் உருவாக்கினார்கள் அவர்களின் பிரதிநிதிகள்தான் கூட்டமைப்பு செயற்படுகின்றது என அவர் பகிரங்கமாக தெரிவித்துவிட்டு சர்வதேசத்துடனோ அல்லது உள்நாட்டிலோ சம்பந்தன் ஜயா பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் அரசியல் சாணக்கியம் சம்பந்தமாக சம்பந்தன் ஜயா கூறியகருத்துக்களை நாம் மறந்து விடவேண்டும்.

தற்போது நமது மக்களுக்கு நிறைய செய்யவேண்டியுள்ளது.யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த மகிந்த கோத்தபாய அரசே தற்போது  ஆட்சியில் உள்ளது இவர்கள் ஊடாக நாம் தீர்வினைப்பெற்றுக்கொள்ள 18தொடக்கம் 20பிரதிநிதிகளை கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு நாம் ஒன்றை தெரிவித்துக்கொள்கின்றோம்இறுதியுத்தம் மரணிக்கும் வரை  விடுதலைப்புலிகளின் தலைவரோ அமைப்போ கூட்டமைப்பை கலைத்துவிட்டோம் என்றோ அல்லது வாக்களிக்கவேண்டாம் என்றோ எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்பதை கூறிக்கொள்கின்றோம்.

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை திருமலையில் பாதுகாக்கவேண்டியே ரூபன் அண்ணரை தலைவர் திருமலைக்கு அனுப்பிவைத்தார்.இன்றுதலைவரின் கட்டளைக்கு எதிராக ரூபன் அண்ணன் செயற்படுகின்றார் என்றார்.