கருணாவுக்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தமைக்காக கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடுவல நகர சபை உறுப்பினர் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர் போசத் கலஹேன பதிரணவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.