மட்டில் தமிழ் மக்கள் 90வீதத்திற்கு மேல் வாக்களிக்க தயாராகுமாறு துரைரெத்தினம் வேண்டுகோள்.

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராசா

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்கள் 75வீதம் உள்ள நிலையில் இதற்கு ஏற்றவாறு நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளை பெறுவதற்காக 90வீதத்திற்கு மேல் வாக்களிக்க தயாராகுமாறு பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப், முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மொத்தமாக ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகளில்  தமிழர்களின் 75வீதத்திற்கு நான்கு தமிழ் பிரதிநிதிகளும், ஏனைய 24வீதமுள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் தெரிவு செய்யப்பட வேண்டும். இவை இப்படியிருக்க தமிழர்கள் வாக்களிப்பில் குறைவாகவே சென்று வாக்களிப்பதால் மூன்று தமிழ் பிரதிநிதிகளையே பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.முஸ்லிம் மக்கள் தங்களுடைய வாக்குகளை முழுமையாக அளித்து வருவதால் வாக்களிக்கும் அடிப்படையில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தைப் போல 2020 பாராளுமன்ற தேர்தலிலும் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெறுவதற்கு பல சூட்சிகளை மேற் கொண்டுள்ளனர். அவர்களின்
சூட்சிக்கு தேசியக்கட்சிகளும் ஓத்துழைப்பு வழங்கி வருவதோடு மாவட்ட ரீதியாகவுள்ள பலகுழுக்களும், கட்சிகளும் விலை போயுள்ளது.

இத்திட்டத்தை முறுகியடித்து  இம் மாவட்டத்தில் தமிழர்களாகிய நாங்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு எங்களின் வீதத்திற்கு ஏற்றவாறு நான்கு தமிழ்பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு இம் மண்ணில் வாக்காளர்களாக உள்ள மூன்று இலட்சம் தமிழர்களும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்களுடைய வாக்குரிமையை அளித்து தமிழர்கள் மட்டக்களப்பில் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்பதை நிருபிப்பதற்கு நான்கு தமிழ் பிரதிநிதிகளை தமிழர்களையே தெரிவு செய்தாக வேண்டும். இது ஊடாகவே இம் மாவட்டத்தில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ முடியும். தேசியரீதியாகவும், சர்வதேசரீதியாகவும்,மாகாணரீதியாகவும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் என்பதை நிருபிக்க முடியும்.

வாக்களிப்பில் நாங்கள் தயங்குவோமானால் மாவட்டத்தில் இம் முறையும் அபிவிருத்தியில் புறந்தள்ளப்படுவோம். 24 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்ற மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக் கொண்டும், ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டும்.  மூன்று தேசிய அமைச்சர்களைப் பெற்று அவர்களின் சமூகத்திற்கு அபிவிருத்தி செய்து வந்ததே வரலாறாகும்.

தமிழர்களாகிய நாம் வாக்களிப்பில்  இம் முறையும் குறைவாக அளிக்கும் பட்சத்திலும், வாக்குகளை பிரிப்பதற்காக போட்டி போடும் நபர்களுக்கு வாக்களிக்கும் பட்சத்திலும் கொரனா தொற்று நோயினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லாமல் இருக்கும் நிலையிலும் மந்தகதியில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விடும் பட்சத்தில் எமது நான்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.

இந்த நிலை எமக்கு ஏற்படும். சிங்கள பௌத்த தேசியவாத அரசு தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று பத்தொன்பதையும்,13ஆவது திருத்தச் சட்டத்தையும்
இல்லாமலாக்குவதற்கு பாரிய சதி வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில்
மாவட்ட ரீதியாகவும், தேசியரீதியாகவும்  மட்டக்களப்பு தமிழர்களாகிய நாங்கள் பாதிக்கப்படுவோம் என்னும் நிலை உருவாகும்.

தேசிய ரீதியாகவும், மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் எமக்கான உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு அபிவிருத்தி வேலைகளையும் மேற் கொள்வதற்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்களைப் பெற்று நான்காவது ஆசனங்களைப் பெறுவதற்கு 7000ஆயிரம் வாக்குகள் குறைந்த நிலையில் இம் மாவட்டத்தில் உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஒருஇலட்சத்தி நாப்பதாயிரம் வாக்குகள் அளிப்பதன் ஊடாக நான்கு ஆசனங்களைப் பெறமுடியும்.

எனவே அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்கு சாவடிக்குச் சென்று வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து, தமிழ் பிரதிநிதிகளைப் பாதுகாக்க தயாராகுமாறு
அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.