அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா? என தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்

0
202
மட்டுமாறன்
ஒட்டுமொத்த தமிழர்களையும் நசுக்கும் என்ற விடயத்தை  சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. அரசியல் ரீதியாக பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு நமது மக்களை ஒரு குழப்பகரமான சூழ்நிலை விட்டுச் செல்லவேண்டும் என்ற நோக்கோடும்  இந்த அரசு செயற்படுகின்றது என தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட வேட்பாளர் தவராசா கலையரசன் பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்துகொண்ட உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு யாரை பயன்படுத்தியதோ  அவரைத்தான் தற்போது அம்பாறை மாவட்டத்தில் இந்த அரசு களமிறக்கி இருக்கிறது.அம்பாரை மாவட்டத்தை காப்பாற்றப் போவதாக சூளுரைக்கும் அவர் தன்னை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கின்றனர். அவருடைய வாக்கை கூட  அவரால் அம்பாறை மாவட்டத்தில் வழங்க முடியாத சூழ்நிலை.
நிதானமான பேச்சு இல்லை ஒரு சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை புகழ்ந்து பேசுகின்றனர் மறு சந்தர்ப்பத்தில் தலைவரை இகழ்ந்து பேசுகின்றார்.இவரிடம் சீரான ஒரு கொள்கையும் இல்லை .
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலை இரண்டு சமூகத்தின் நெருக்கடிக்கு  உட்பட்டது.கருணாவுடன் இணைந்து  போராடி மரணித்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அரச படைகளின் ஆகாகிரமிப்பிலிருந்து கூட காப்பாற்ற முடியாதவர் ஒருவரால் எவ்வாறு எமது மக்களை காப்பாற்ற முடியும்.
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர்  துயிலும் இல்லத்தினை  இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் நாங்கள் தான் அவ்விடத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தினோம். அரச படைகள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்யும் வேலைகளை எல்லாம் பாராட்டி புகழ்ந்து பேசிவந்த கருணாவால்  சிறிய ஒரு காணி துண்டையாவது அரசின்  ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கொடுக்க முடியுமா என கேள்வியெழுப்பினார்