அபிவிருத்தி மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கமே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதனால் தமிழ் மக்கள் அதன் பங்காளர்களாகவிருந்து அபிவிருத்தி மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொது ஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.