இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.இரா சம்பந்தன்

0
121

(கதிரவன், அப்துல்சலாம் யாசீம்)
இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேசத்திலும்ஐக்கியநாடுகள் சபையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள அவரது காரியாலயத்தில்   நேற்று(17) இடம்பெற்ற முதியோர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் 13வது திருத்தசட்டத்தின் ஊடக மாகாணசபை முறைஏற்படுத்தப்பட்டது அதனுடாக எமதுமக்களுக்கான அதிகாரங்களைப்பெற முயற்சித்து சகல அரசுகளுடன் காரியங்களில் ஈடுபட்டோம்.
புதிய அரசியல்அமைப்பொன்று உருவாக்கப்படவேண்டும் அந்த அரசியல் அமைப்பு ஊடாக சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட வேண்டும் அதற்கு நாம் ஒரேகட்சியாக பாராளுமன்றம் சென்று பலமிக்கவர்களாக மிளிரவேண்டும.

இம்முறை தேர்தலானது மிக முக்கியமான தேர்தலாகும். திருகோணமலை மாவட்டத்தில் 90 ஆயிரம் தமிழ் வாக்குகள் இருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றால் இரண்டு ஆசனங்களைப் பெறமுடியும் எனவும் இதனை கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் பேசும் மக்களும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்பொழுது உங்களை அழைத்து பேசுவதன் நோக்கம் நீங்கள் உங்களது பகுதிகளில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதை அறிந்துள்ளோம் மாற்று கட்சியினர் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கூறுவார்கள் ஆனாலும் நீங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று எதிர்காலம் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்காமல் போனால் எவ்வாறு அமையும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த தேர்தலின் போதும்  வடக்கு கிழக்கில் 16 ஆசனங்களை பெற்றிருந்தோம். இம்முறை   20 ஆசனங்களை பெறுவதற்கு  பொன்னான வாக்குகளை வீட்டுச் சின்னத்திற்கு அளிக்க வேண்டும் எனவும்  சர்வதேச சமூகத்துக்கு  எமது  ஒற்றுமையையும், புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் முக்கியத்துவம்  எமது வாக்குளே தீர்மானிக்கும்  எனவே திருமலை  மக்கள் அனைவரும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என இரா சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.