தமிழ் மக்களின் பிரச்சனைகளைஅதிகாரம் உள்ளவரால்தான் பெற்றுக்கொடுக்கமுடியும்

0
126

TMVP வேட்பாளர் கே. ஜெயவாணிதாசன்  

( எஸ்.சதீஸ்)

பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது  என்ற கருத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் கே. ஜெயவாணிதாசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடியில்  வியாழக்கிழமை (16ம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர்  இக் கருத்தினை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மிகவும் பாதிக்கப்பட்ட இனமாக நாங்கள் மாறிக்கொண்டிருக்கின்றோம், அரசியல் ரீதியிலான பலம், பாதுகாப்பு எமது மக்களுக்கு குறைவாக இருப்பதனால் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தலைமையை உருவாக்குவது முக்கிய நோக்கமாக இருக்கின்றது. அதேபோல் எமது இளைஞர் யுவதிகளின் தொழில்வாப்பை பெற்றுக்கொடுக்கும் கட்டமைப்பை நிறுவவுள்ளோம், அதேபோல் எமது பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும்  திட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால், அது பொருளாதார அபிவிருத்தியாகக்கூட இருக்கலாம் அவைகளை ஒரு அதிகாரம் உள்ளவரால்தான் பெற்றுக்கொடுக்கமுடியும், அதிகாரம் இல்லாத எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது,  என தெரிவித்தார்.