மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கட்டட கூரை உடைந்து வீழ்ந்தது.

சுழல் காற்றினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கட்டட கூரை உடைந்து வீழ்ந்த சம்பவம் இன்று(15) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் மழையுடன் வீசிய சுழல் காற்றினால் இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல்மாடிக் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.

இக்கட்டிடம் புதியதாக அமைக்கப்பட்டு இவ்வருடம் திறந்து வைத்து, அலுவலக நடைமுறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அலுவலகம் நிறைவுற்றதன் பின்பு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் எடுத்துக்காட்டத்தக்கது.