அவளுக்கு ஒரு வாக்கு தெருநாடகம்

        சில்மியா யூசுப்
பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கடந்த திங்கள் மன்னாரில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் ‘தெரு நாடகம்’ அரங்கேற்றப்பட்டது.
இந்த நிகழ்வானது மன்னார் மகளிர் மேம்பாட்டு சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலக்ஸ்மி குருஷந்தன்,மன்னார் நகரில் வாழும் மக்கள் மற்றும் பாதசாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா, அதன் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மற்றும் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட தேர்தல் ஆணையக அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
 இங்குகருத்து தெரிவித்த குருசந்தன், நாடகத்தின் நோக்கமானது பாராளுமன்றத்தில் பெண்களின் முக்கிய பங்கை சித்தரிப்பதாகும். “8 வது பாராளுமன்றத்தில் எங்களுக்கு 12 பெண்கள் மட்டுமே இருந்தனர், இது குறிப்பிடப்படாத நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு குறைவாக காணப்பட்டது என்று அவர் கூறினார், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பெண்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு பெண்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மன்னார் மகளிர் மேம்பாட்டு கூட்டமைப்பின் புலவலராக இருக்கும் மகளிர் உரிமை ஆர்வலர் ஸ்ரீன் சரூர் தெரிவிக்கையில்தேர்தலுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார். “நாங்கள் எதிர் வரும் நாடாளுமன்றத்தில்  அதிகமான பெண்களை அனுப்புவதற்கு விரும்புகிறோம், என்று அவர்  கூறினார்.