சமூக விஞ்ஞான போட்டியில் சாதித்த மாணவி.

0
143

(படுவான் பாலகன்) அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மேகநாதன் நிவேதிதா 4ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

2019ம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான சமூகவிஞ்ஞான போட்டி முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதற்கேற்ப தரம் 6பிரிவில் தோற்றிய குறித்த மாணவி அகில இலங்கையில் 4ம் இடத்தினைப் பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவியின் வெற்றிக்கு துணைபுரிந்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், வெற்றியீட்டிய மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.