தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் : 50பேருக்கே அனுமதி.

0
211

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை(14) காலை 8.00மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவோண நட்சத்திரத்தில் எதிர்வரும் 04.08.2020ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.

21நாட்கள் இவ்வாலய மகோற்சவம் நடைபெறவுள்ளது. இவ்வாலய மகோற்சவத்தினை காண நாட்டில் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதருவதுண்டு. தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்வருட மகோற்சவத்தின் போது, ஒவ்வொரு திருவிழா நாட்களிலும் 50பேர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலனசபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.