மன்சூர் பவுண்டேஷனின் ‘கதை சொல்லி பரிசு வெல்வோம்’ போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

0
160

 

(அஸ்லம் எஸ்.மௌலானா) சர்வதேச சிறுவர் வாசிப்பு தினம் மற்றும் உலக புத்தக தினம் என்பவற்றை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்ட சிறுவர்களிடையே நடாத்திய ‘கதை சொல்லி பரிசு வெல்வோம்’ எனும் போட்டியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா விடுமுறை காலத்தை புத்தகங்களின் துணையோடு கடக்கும் நோக்குடன் ‘வாசிக்கும் சமூகத்தினை வித்திட சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்’ எனும் தொனிப் பொருளில் முகநூல் ஊடாக இப்போட்டி நடாத்தப்பட்டிருந்தது.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் முகநூல் ஆதரவின் அடிப்படையிலும் நடுவர்கள் தேர்வின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முகநூல் ஆதரவின் அடிப்படையில் சாய்ந்தமருதை சேர்ந்த மினால் கலீல் முதலாமிடத்தையும் மருதமுனையை சேர்ந்த எம்.ஜே.அக்ஸத் அஹமட் இரண்டாமிடத்தையும் பாண்டிருப்பை சேர்ந்த ரகு ஜனுகேஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.எச்.ஆர்.எம்.றஹ்மி முதலாமிடத்தையும் மருதமுனையை சேர்ந்த ஏ.ஆர்.அபிஷா றகாத் இரண்டாமிடத்தையும் கல்முனையை சேர்ந்த ரி.கனிஷ்னவி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் முகநூல் ஆதரவின் அடிப்படையில் எம்.ஆர்.யர்ரா (இறக்காமம்), எம்.ஏ.அப்தினி அன்ஹத் (சாய்ந்தமருது), எப்.மஹ்தி அஹமட் (சாய்ந்தமருது), ஆர்.எப்.சம்றா (சாய்ந்தமருது), எம்.ஏ.பிஸாருல் ஹிகாம்
(கல்முனை) ஆகிய 05 சிறுவர்களும், நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் எஸ்.கவிநயா (கல்முனை), எம்.ஏ.ஆதிப் அஹமட் (மாளிகைக்காடு), தவசீலன் பிரிதேஸ் (கல்முனை), எம்.எஸ்.செஸரினா (இறக்காமம்),
எம்.ஏ.லுக்மான் அஹமட் (கல்முனை) ஆகிய 05 சிறுவர்களும் ஆறுதல் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு விழா விரைவில் இடம்பெறும் என்றும் போட்டியில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் இவ்விழாவின்போது சிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் நினைவாக உருவாக்கப்பட்ட மேற்படி அமைப்பானது கடந்த மூன்று வருடங்களாக கல்முனை மாநகரப் பிரதேசங்களில் கல்வி, கலாசார மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.