மகிழடித்தீவு பிரதான வீதியில் விபத்து, 4 பேர் காயமுற்றனர்.

(சுடர்) மகிழடித்தீவு பிரதான வீதியில் இன்று (12) விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் TATA லொறி ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.