பாராளுமன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அம்பாறை மாவட்ட சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு பயிற்சி செயலமர்வு.

ஏ.எல்.எம்.ஷினாஸ்)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போது அம்பாறை மாவட்டத்தில் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி செயலமர்வு இன்று (10.07.2020) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் திலிண விக்கிரமரத்ன ஆகியோரது வழிகாட்டலுக்கமைய நடைபெற்ற இந்த பயிற்சி செயலமர்வில் முன்னாள் மாவட்ட மேலதிக காணிப்பதிவாளர் இசட்.நஸீறுத்தீன் வளவாளராக கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

தேர்தல் கடமைகளின் போது,  வாக்களிக்கும் நிலையத்திலும் வாக்கு எண்னும் நிலையத்திலும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் 2020 ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலின் போது சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடாத்தும் தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.