அதிகரிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்.

0
139

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோதுஅவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேவேளை இன்று காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2151 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.