இந்த ஆட்சி தொடர்ந்தால் மக்கள் மண்னைதான் உண்ணவேண்டிவரும் வி.வினோகாந்த்

வி.சுகிர்தகுமார்

  அம்பாரை மாவட்டத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் ஆசை ஆசையாக பேசி  உணர்ச்சிகளை தூண்டி தமிழ் என்று சொல்லி வாக்குகளை பெறுவர்களே அதிகம்.  ஆனால் பயனில்லை என அம்பாரை மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் ஒரே தமிழ் வேட்பாளர் வி.வினோகாந்த் மக்கள் சந்திப்பொன்றின் பொது தெரிவித்தார்.

இந்த நிலையில் கூட நாங்கள் எந்தக்கட்சிக்கும் எதிரானவர்களாக செயற்படவில்லை. எந்த கட்சியின் தலைவருக்கும் விரோதமானவர்களாகவும் இல்லை.

மாறாக மக்கள் வழங்கும் வாக்கிற்கு நன்றியுடையவர்களாகவும் ; அவர்களின் வாழ்க்கைத்தரத்தை வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை  விடுக்கின்றோம்.

1500 ரூபா சம்பளம் பெறும் அன்றாட தொழிலாளியினால் எப்படி வாழ முடியும். அதில் உணவருந்த வேண்டும். மின்சாரம் தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டும். பி;ள்ளைகளின் கல்வி மற்றும் அன்றாட சுக துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதைவிட வீடும் கட்ட வேண்டும்.  இது எப்படி சாத்தியமாகும் என்றார்.

ஆகவேதான் எனது தேசிய தலைவர் சஜித் பிரேமதாசா நாடளாவிய ரீதியில் 2500 இற்கும் மேற்பட்ட வீட்டுத்திட்டத்திட்டங்களை ஆரம்பித்தார். அதனையும் இடைநிறுத்தி விட்டனர்.

இதேநேரம் அரசு ஆட்சிக்கு வந்து ஆறுமாதமாகிவிட்டது விலை வாசி மாத்திரமே உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்தால் மக்கள் மண்னைதான் உண்ணவேண்டிவரும் என்றார்.