முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அறைகூவல்.

(செ. பேரின்பராசா)மட்டக்களப்பு தமிழ் மாவட்டத்தை சிங்கள பௌத்த அடையாள மாவட்டமாக மாற்றுவதற்கு மேற் கொள்ளப்படுகின்ற முயற்சியாளர்களுடன் தேர்தல் களத்தில் குதித்துள்ள வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் சிங்கள மாவட்டமாக மாறுவது உறுதி. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொல்லியல் அடையளத்திற்கான இடங்களை
ஒரு இனம் சார்ந்த பௌத்த மதகுருக்களைக் கொண்டும், இராணுவத்தைக் கொண்டும் தமிழர்கள் தொண்டு தொட்டு வாழ்ந்து வரும் கலாசார அடையாளங்களை புத்த மதத்திற்குரிய அடையாளங்களாக மாற்ற முயல்வது
இனவாத ஆளும் அரசே. இவ் அரசுடன் கூட்டுச் சேர்ந்து அக்கட்சியின் சின்னத்தில் கோடிக்கணக்கான நிதிகளையும், சலுகைகளையும் பெற்று இம் மாவட்டத்தில் தமிழர்களுக்குரிய வாக்குகளையும் சிதறடித்து நான்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் நோக்குடன் பகடக்காய்களாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இம் மாவட்டத்தில் 75வீதம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். என நிருபிப்பதற்கு மாறாக தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கரடியனாறு கிராமத்தில் அமைந்துள்ள மூத்தகுடியினர் வாழுகின்ற குசலான மலையையும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வெல்லாவெளி கிராமசேவர் பிரிவிலுள்ள வேத்துச்சேனையையும் 05.07.2020 அன்றும் அதற்கு முன்னரும் தொல்லியல் திணைக்களமும், பௌத்தகுருமாரும், இராணுவமும் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிய வருகின்றது.

தொல்லியலை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அது உள்ள பல இடங்களை அப் பகுதியிலுள்ள தமிழ் சமூகம் சிறப்பான முறையில் பாதுகாத்து வருகின்றது. இதற்கு இராணுவமோ,பொலிசாரோ,பௌத்தமதகுருமாரோ சென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. அந்தந்தப் பகுதியிலுள்ள மக்களே மிகவும் சிறப்பான முறையில் தொல்லியலை பாதுகாத்து வருவதே வரலாறாகும்.

தென்னிலங்கை சிங்கள பகுதியிலுள்ள தொல்லியல் அடையாளங்களை அப் பகுதியிலுள்ள மக்களே மிகவும் சிறப்பான முறையில் பாதுகாத்து வருகின்றனர். இவ் இடங்களை இராணவமோ, பொலிசாரோ சென்று பார்வையிடுவதில்லை, இராணுவ முகாமம் அமைக்கப்படுவதில்லை கடந்த காலங்களில் மாறிமாறி ஆட்சி புரிந்த அரசாங்கத்தின் ஒருபக்கச்சார்பான ஒரு இனம் சார்ந்த செயல்பாடுகளே இனங்களுக்குள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கான காரணமாகும். மாறிமாறி ஆட்சி புரிந்த அரசே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யட்டதற்குப் பின் பௌத்த மேலாதிக்கம் மட்டக்களப்பில் தலைதூக்குவது புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பல விடயங்கள் தலைதூக்கியதே வரலாறாகும்.

இலங்கையில் வாழ்ந்த மூன்றினங்களும் கலாசார ரிதீயாகவும்இமொழிஇபண்பாடு, தொழில் இணைப்பு போன்ற விடயங்களிலும் மிகவும் அன்னியொன்னியமாக வாழ்ந்து வந்ததே வரலாறாறு. இப்படி வாழ்ந்து வந்த சமூகத்தை சின்னா பின்னமாக்கி முகம் பார்க்காதளவிற்கு பகை முரண்பாட்டை தோற்றுவித்து இனக்கலவரத்தை ஏற்படுத்தி இடம் பெயர வைத்துஇ உயிராபத்துக்களை ஏற்படுத்தி எமது சமூகம் நிற்கதியான நிலைக்கு கொண்டு சென்றது இனவாத அரசு என்பது எமக்குத் தெரியும்.

இப்போது ஒரு சுமூகமான சூழல் மாறி வருகின்ற காலகட்டத்தில் மீண்டும் இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடியவாறு புனித மதத்தின் பேரால் செயற்படுகின்ற ஒரு சிலர் ஒரு இனம் சார்ந்து ஆளுகையை ஏற்படுத்துவதென்பது மீண்டும் இனங்களுக்குள் மத்தியில் ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கக் கூடிய செயலாகவே பாhர்க்க வேண்டி உள்ளது. இலங்கையில் பல மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேச செயலகப்பிரிவுகள்,கிராமங்கள் தோறும் மூவினங்களும் பெரும்பான்மை, சிறுபான்மைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில் தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் அம் மக்களின் புராதான காலத்து அடிச்சுவடுகள் யுத்தத்தின்போதும், இனக்கலவரத்தின் போதும் திட்டமிட்டு அழிக்கப்பட்டாலும் அச்சுவடுகள் வரலாற்றுச் சுவடுகளாக காட்சி அளிக்கின்றன. அச்சுவடுகளை திரிபு படுத்தாமல் வரலாற்று ஆவனங்களாக பாதுகாப்பதோடு, வரலாற்று அடையாளம் மாறாமல் இருப்பதற்குரிய செயற்பாட்டை மத்தியஅரசாங்கம் தோற்றுவிக்குமா?

இப்படி தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்ற பௌத்த மத ஆதிக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தும் தேர்தல் களத்தில் போட்டியிட்டும் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வேட்பாளர்கள் ஒத்துழைக்காமல் நான்கு தமிழ் பிரதிநிதிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தெரிவு செய்வதற்கு இத்தேர்தலில் இருந்து தமிழர்களின் நன்மை கருதி ஓதுங்கிக் கொள்ளுமாறு அறை கூவல் விடுக்கின்றேன்.