கல்முனையில் நல்லிணக்கத்திற்கான விழிப்புணர்வு பதாதை திறந்து வைப்பு.

0
132

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரம் தமிழ் – முஸ்லிம்இ சிங்கள மக்கள் என்று பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும்.இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக இகலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் ‘சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைக்கும் நிகழ்வு நல்லிணக்கத்திற்கான சமூக மன்றத்தின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் (07) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ‘இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம், இலங்கையராய் ஒன்றிணைவோம்’ எனம் விழிப்புணர்வூட்டும் வசனங்கள் எழுதப்பட்ட பதாகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி. அன்சார், பிரதேச சமூக நல்லிணக்க மன்றங்களின் இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், வேலுப்பிள்ளை தங்கவேல், சமாதானம் மற்றும் சமூகப்பணிக்குமான அமைப்பின் இணைப்பாளர் ரி.ராஜன்,ஒருங்கிணைப்பாளர் கே.ரி.ரோகினி உட்பட மாநகர சபையின் நிருவாக அதிகாரிகள், சமூக அமைப்புக்களி, பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.