மட்டக்களப்பில் முதல்முறையாக இரு வாக்கெண்ணும் நிலையங்கள்.

0
184
ரீ.எல்.ஜவ்பர்கான்–
எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதே நேரம் முதன்முறையாக இரு இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளதாகவும் அந்த அத்திணைக்களம் தெரிவித்துள்ளது;.

வழமையாகஇம்மாவட்டத்pதில் 38 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன.இம்முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதாலும் 60 வாக்கொண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கல்குடா பட்டிருப்பு தொகுதிகளின் வாக்குகளும் தபால் மூல வாக்குகளும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்குகள் மகாஜனாக் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவிததார்.
இம்மாவட்டத்தில் 409808 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.