8கல்வி வலயங்களுக்கு பணிப்பாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்முக தேர்வு

0
168

கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட 8கல்வி வலயங்களில் நிலவும் வலயக் கல்வி பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு நேர்முக தேர்வுக்கான திகதியை அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட திருக்கோயில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, கிண்ணியா, திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களுக்கான நேர்முக தேர்வே எதிர்வரும் 10.07.2020ம் திகதி காலை 9.30மணி தொடக்கம் 4.30மணி வரை ஒவ்வொரு கல்வி வலயத்திற்கும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறவுள்ளது.

குறித்த வலயங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் குறித்த வலயங்களுக்கு பணிப்பாளர்களை நியமனம் செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான நேர்முக தேர்வு நடைபெறுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.