சி.வி. இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிக்கடாக்குவதுடன் வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காட்டுகிறார் – அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

0
147

சி.வி.விக்ணேஸ்வரன் தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிக்கடாக்குவதுடன் அவரது வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காண்பிக்கின்றார் என்று அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.
சனிக்கிழமை (04.07.2020) அன்று மட்டக்களப்பிலுள்ள மங்கள ராமய விகாரையில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அம்பிட்டியே சுமணரத்ன தேரர்  மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழு 22 மேளச் சின்னத்தில் 1ம் இலக்கத்தின் கீழ் போட்டியிடுகிறார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமணரத்ன தேரர்,
நான் இம்முறைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு போட்டியிட வேண்டியிருப்பது நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்ட ஏற்றுக் கொண்ட பல அரசியல் கட்சிகளுடனும் 21 சுயேட்சைக் குழுக்களுடனுமாகும்.
அரசியல் தொடர்பாக என்னிடம் குறைந்த அனுபவம் இருந்த போதிலும், துன்பத்திற்குள்ளாகி இருக்கும் அப்பாவி மக்களுடைய வேதனை எனும் அனுபவம் அளப்பெரியதாகும்.
இந்த தேர்தல் காலத்தினுள் என்னால் அவதானிக்கப்பட்ட விடயமாவது என்றும் போல் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சி எடுக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகள் உங்களை ஏமாற்றிக் கொண்டுவந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நீர் வசதியின்றி 58,000ம் மக்களும், தலைக்கு மேல் கூரையின்றி வாழுகின்ற பல இலட்சம் குடும்பங்களும் இன்றுவரை இந்த மாவட்டத்தினுள் வாழ்வதன் மூலம் அவர்களுக்கான எவ்விதமான சமூக வசதிகளும்; வழங்கப்படவில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது. இம்முறை அவர்கள் தங்களது நோக்கத்தை அடைவதற்கு முயற்சி எடுப்பது இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை சமூகமயப்படுத்துவதன் மூலமாகும். உதாரணமாகக் கூறினால் சி.வி.விக்ணேஸ்வரன் தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிகேடாக்குவதுடன் அவரது வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காண்பிக்கின்றார்.

அவருடைய இவ் இரட்டை ஜாலமானது இன்று சமூகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அவருடைய கட்சியில் களமிறங்கியுள்ள குறித்த வேட்பாளர் 11 வருடத்திற்கு முன் இறந்து போன உங்களுக்காக தோன்றிய தலைவரது புகைப்படத்தினை காட்சிப்படுத்தி செய்யப்படும் பிரச்சார நடவடிக்கைகளில் தெரிய வருவது அதுவல்லவா? மட்டக்களப்பு வாக்காளர்களது மனதில் அவ்விதமாக இனவாதத்தை உட்புகுத்தும் விதமாக செயற்படுத்தப்படும் அரசியல் உண்மையிலேயே வஞ்சகமான அரசியல் என்பதனை புத்திஜீவிகளான நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும் அல்லவா? இதுவரை எனக்கு என்னுடைய வெற்றி பற்றி எவ்விதமான சந்தேகங்களுமில்லை. அன்றாடம் என்னைச் சுற்றிச் சேரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு என்னால் நாளைய தினம் முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
பௌத்த தேரர் என்ற முறையில் என்னுடைய செயல்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் இம்முறை நான் முன்நிற்பது இது வரை உங்களுக்காக பாராளுமன்றத்திற்குச் சென்ற எவருமே அப்பாவி சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்களது பொதுப் பிரச்சனைகளுக்கான தீர்வினைப் பெற்று வழங்காததனால் ஆகும். இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நம்பிக்கையுடன் யாராயினும் முன் நிற்பாராயின் எனது இந்த முயற்சியை அவர்களுக்காக அர்ப்பணிப்பதற்கு நான் பின் நிற்கமாட்டேன்.

என்னைத் தவிர என்னுடன் போட்டியிடும் 303 வேட்பாளர்களிடையே அவ்வாறான ஒருவர் இருப்பாராயின் தாமதிக்காது என்னைச் சந்தித்து அப்பாவி மக்களது பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்கள் உங்களிடம் இருக்குமிடத்து அதனை என்னுடன் கலந்துரையாடுவீர்களாயின் என்னுடைய வாக்கினை அவருக்காக வழங்கிவிட்டு நான் இந்த அரசியலில் இருந்து விலகுவேன். அவ்வாறாயின் நான் பொதுவாக உங்களிடம் கேட்டுக் கொள்வது மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை மேலும் இரத்த வெள்ளத்திற்கு உள்ளாக்காது நல்லொழுக்கமுள்ள அரசியலினை உருவாக்குங்கள் என்பதாகும்.