மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு ஆசனம்

0
180

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியானது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும், வேட்பாளருமாகிய தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார்.

வாழைச்சேனையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கையிலேயே ஒரு முன்மாதிரி மாவட்டமாக அபிவிருத்தி செய்வதே தனது நோக்கமாகும். வறுமையிலிருந்து மட்டக்களப்பை மீட்க வேண்டும். மாவட்டத்தில் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது.

தான் சார்ந்த கட்சியானது ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுடனான அர்ப்பணிப்பு சேவை தொடர்பாக தம்மை அடையாளம் கண்டு மாவட்ட அமைப்பாளராக நியமித்தனர். இதன் மூலம் பல சவால்களை எதிர்கொண்டேன்.

எனது திறமையினால் அதனை சூழலுக்கு ஏற்றால் போல் சாதகமாக மாற்றிக் கொண்டேன். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வறிய நிலையில் வாழும் மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியிருந்தேன்.

அதன் நிமித்தம் எனது சேவையினை அறிந்து கட்சியானது என்னை மீண்டும் இங்கு வேட்பாளராக நியமித்துள்ளனர். எனவே இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேவையாற்ற தயாரகவுள்ளேன் என்றார்.

இதில் ஜக்கிய தேசிய கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும், கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.