திருக்கோவில் ஸ்ரீ சித்திரலோயுத சுவாமி ஆலய ஆடியமாவாசை கொடியேற்ற திருவிழா

0
139

எஸ்.கார்த்திகேசு)

கிழக்கிலங்கை வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடார்ந்த ஆடியமாவாசை திருவிழா இன்று வெள்ளிக்கிமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாது.
இவ் கொடியேற்ற திருவிழாவானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான குருமார்களால் கொடியேற்றத் திருவிழா பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாத சுவாமி ஆலய கொடியானது தம்பிலுவில் முனையூர் படபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து கொடி ஊர்வலமாக விஸ்வ பிரம்மகுல மற்றும் ஆலய நிருவாகம் ஆகியோரால்  கொடி எடுத்து வரப்பட்டு முருகன் ஆலயத்தில் வேதாகம முறையில் ஹோமங்கள் இடம்பெற்று சுவாமி மகா மண்டபத்தில் எழுந்தருளச் செய்து ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களினால் கொடித் தம்பத்தில் கொடியேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நண்பகல் பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத் திருவிழாவுடன் வருடார்ந்த ஆடியமாவாசை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியதுடன்  18நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 20ம் திகதி சமூத்திர தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டு உற்சவம் நிறைவு பெறவுள்ளன.

இவ் ஆடியமாவாசை உற்சவமானது அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப ஆலய பூஜைகளில் பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் கலந்து கொள்வதுடன் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்திற்கு வருகை தரவேண்டும் என ஆலய தலைவர் எஸ்.சுரேஸ் வண்ணக்கர் வ.ஜயந்தன் மற்றும் நிருவாகத்தினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது